--- --:--:-- --

மிஷன் கர்மயோகி எனும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல்..!

8

த்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக மிஷன் கர்மயோகி என்னும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

 

இதில் மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக மிஷன் கர்மயோகி எனும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அரசு அதிகாரிகளை தொழில்நுட்பம், புத்தாக்கம், ஆக்க பூர்வமாக சிந்தித்தல், தொழில் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் நிறைந்தவர்களாக மாற்றுவதற்கு பயிற்சி அளிப்பதற்கு மிஷன் கர்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

 

மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஹிந்தி, டோக்ரி, காஷ்மீரி ஆகியவற்றையும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார். தற்போது ஆங்கிலமும், உருதும் காஷ்மீரி அலுவல் மொழியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon