--- --:--:-- --

சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை..!

15

மிழகத்தில் நேற்று இரவு சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குளிர் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

 

எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கேகே நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் தண்டையார்பேட்டை திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் மாலை ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.

 

இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல்லை சுற்றியிருக்கும் செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, கோபுரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாலை 5 மணி முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நள்ளிரவு முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 

விக்ரவாண்டி, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனிடையே இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon