--- --:--:-- --

பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி ஏன்?

2

ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட துரதிருஷ்டவசமான ஈகோ காரணமாகவே பிரச்னை ஏற்பட்டிருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளர். பாமகவில் தந்தை- மகன் பிரச்னைக்கு மத்தியில், சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.

 

இதை எதிர்த்து, ராமதாஸ் தரப்பு பொதுச்செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோரை தனது அறையில் தனியாக சந்தித்து பேச விரும்புவதாக அழைப்பு விடுத்தார்.

 

அதன்பேரில் அன்புமணி நேரில் ஆஜரான நிலையில், உடல்நல காரணங்களால் ராமதாஸ் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொதுக்குழுவை கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாக ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

 

அன்புமணி தரப்பில், கட்சி விதிகளின்படியே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Right Menu Icon