2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம்: நாசா திட்டம்
2030-க்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது, நிலவில் மனிதன் நிரந்தரமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிலவில், சூரியசக்தி மற்றும் பேட்ரிகளால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணுமின்நிலையம் அவசியமானதாக கருதப்படுகிறது. ஆனாலும் பூமியின் வலிமண்டலம் வழியாக அணுக்கதிர் பொருட்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





