--- --:--:-- --

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை: மூணாறு அருகே நிலச்சரிவில் 5 பேர் மாண்டன்.. 10 பேர் உயிருடன் மீட்பு.. 80 பேர் கதி என்ன?

41a7b197-72b9-46c4-a524-b6cfdd47a3d4

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரோடு மாண்ட நிலையில், 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 80 பேரின் கதி என்ன? என்ற நிலையில் பேரிடர் மீட்புப் படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் கனமழை கொட்டி வருவதால் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை வரும் 11-ந் தேதி வரை நீடிக்கும் என்பதால் இடுக்கி, மலப்புரம் உள்பட பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

தொடர் கனமழை காரணமாக கேரளாவின் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இதில் இடுக்கி மாவட்டத்தில் மூனாறு அருகே ராஜமலை பகுதியில் 2 ள்ள தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்தார். மீட்பு பணியின் போது 5 பேர் உயிரிழந்த நிலையிலும்,10 பேர் உயிருடனும் மீட்கப்பட்டு உள்ளனர்.

 

இந்த நிலச்சரிவில் மேலும் 80 பேர் வரை சிக்கியுள்ளதாகவும், அவர்களின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் மீட்பு பணியை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon