வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற இடத்தில் இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு
கரூரில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற இடத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், திமுக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் குவிந்திருந்தனர்.
அதைப்போல அதிமுக வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் அங்கு குவிந்திருந்தனர். அப்போது அங்கு பட்டாசு வெடிக்கும் போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.





