--- --:--:-- --

உலகம் அழிந்துவிட்டால்..முன்கூட்டியே நடக்கும் ஏற்பாடுகள்!

14

உலகம் பேரழிவை சந்திக்கும் நிலை வந்தால் அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பிரம்மாண்ட பெட்டகத்தில் லட்சக்கணக்கான தானிய வகை விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.

 

அணு ஆயுதப்போர், கொடிய நோய் உள்ளிட்டவற்றால் உலகம் அழியும் நிலை உருவானால் செடி,கொடிகள் இல்லாத நிலை ஏற்படும். அப்போது மனிதர்களுக்கு தேவையான உணவு, பழங்கள் உள்ளிட்டவை இல்லாமல் போனால் அதை எதிர்கொள்ளும் வகையில் நார்வே மற்றும் வடதுருவம் இடையிலான பகுதி பிரம்மாண்ட பெட்டகம் நிர்வகிக்கப்பட்டு அதற்குள் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள், பழவகைகள், பூ வகைகளின் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.

 

இந்தியா, மாலி ,பெரு உள்ளிட்ட நாடுகளில் இருந்து 30 வகை தானியங்களின் விதைகள் பிரிட்டிஷ் இளவரசர் தோட்டத்தில் உள்ள செடிகளின் அரிய வகைகள் நேற்று கொண்டு வரப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon