கொரொனா தொற்றில் இருந்து குணமானவர்கள் எப்போது தடுப்பூசி போடலாம்..?
பெருந்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி போடப்படுபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளதை தொடர்ந்து தொற்றில் குணமடைந்தவர்கள் 4 வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் வரை தடுப்பூசி போடுவதை தள்ளிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தடுப்பூசி எடுத்தவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டால் அடுத்து தடுப்பூசியை 3 மாதங்களுக்கு பிறகே போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்த பிறகு நான்கு வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் வரை தடுப்பூசி போட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்கு பிறகு ரத்ததானம் செய்யலாம் என்று மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




