--- --:--:-- --

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

8

டசென்னை அனல் மின் நிலைய வாயிலில், அடையாள அட்டை வழங்குதல், அரசே நேரடியாக ஊதியம் வழங்குதல் மற்றும் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்க 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Right Menu Icon