முதல் முறையாக “முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் நாளை வருகை!!” கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆய்வுப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் .
அதன்படி காலை 8.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வரும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மதியம் 12.15 மணியளவில் திருப்பூர் மாவட்டம், பழங்கரை அருகே அமைந்துள்ள நேதாஜி தொழில்நுட்ப பூங்காவிற்கு வருகிறார். அங்கு நடைபெறும் நிகழச்சியில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 12.45 மணிக்கு கோவை செல்கிறார்.
மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபின் திருப்பூருக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடமான நேதாஜி தொழில்நுட்ப பூங்காவில், மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ்,டிஐஜி நரேந்திரன்நாயர், திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.திஷாமித்தல், திருப்பூர் மாநகர போலீஸ்கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.



