--- --:--:-- --

மகளுக்காக தந்தை செய்த செயல்..! வைரலாகும் போட்டோ..!

9.1

களுக்காக தந்தை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பதிவிடப்பட்ட போட்டோ ஒன்று தந்தையின் ஈடு இல்ல பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது. தந்தைக்கும் மகளுக்குமான பந்த பாசத்தை வார்த்தைகளால் அளவிட முடியாது.

 

தூய்மையான இனிமையான தந்தை-மகள் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த போட்டோ அமைந்துள்ளது சின்னஞ்சிறு குழந்தை ஒன்றுக்கு சமீபத்தில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்காக சிறுமியின் தலை மொட்டை அடிக்கப் பட்டது.

 

அறுவை சிகிச்சைக்கு பிறகு மண்டை ஓட்டில் தையல் போடப்பட்டது. அதை பார்த்த சிறுமியின் தந்தை தனது மகள் கவலைப்படக் கூடாது என்பதற்காகவே மகளைப் போலவே தானும் மொட்டை அடித்துக்கொண்டார்.

 

மகளின் தலையில் உள்ளது போலவே தன் தலையில் தழும்பு ஏற்படுத்திக்கொண்டார். ஆன்லைனில் பகிரப்பட்டு வரும் அந்த படம் தற்போது காண்போரின் இதயங்களை வென்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon