--- --:--:-- --

கொரனா வைரஸ் என்றால் என்ன? – அதன் அறிகுறிகள் என்னென்ன..

2

கொரனா வைரஸ் சுவாசப் பாதையை தாக்குவதால் எளிதில் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்கிய நபருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல் ஆகியவை ஏற்படும். இதனைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

 

இதன் அடுத்தகட்டமாக கடுமையான உடல் வலி ஏற்பட்டு நிமோனியா வந்து கிட்னி செயல் இழக்கிறது. இறுதியில் மரணம் ஏற்படுகிறது. கொரனா வைரஸ் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவுவதால் வைரஸ் தாக்கிய நபரை தொடாமல் இருப்பதன் மூலம் வைரஸ் நமக்கு பரவாமல் பார்த்துக் கொள்ளலாம் மற்றும் தும்மல் மூலம் இது பரவுகிறது.

 

வைரஸ் பாதித்த நபர் பயன்படுத்திய பொருட்களை தொடுவதன் மூலமும் பரவுகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ள வைரஸ் தாக்கிய நபரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். குறைந்தது இருபது வினாடிகளுக்கு கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

 

கைகளை நன்றாக கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் அருகே கொண்டு செல்லக்கூடாது இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதால் வரும் முன் காப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

Leave a Reply

Right Menu Icon