--- --:--:-- --

நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் திகார் சிறை

1

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட பணிகளை திகார் சிறை நிர்வாகம் அடுத்தடுத்து மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெல்லி திகார் சிறை தயாராகிவருகிறது.

 

தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன . வரும் ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

 

அதேநேரம் நான்கு குற்றவாளிகளும் கடைசி விருப்பங்கள் எழுதிக் கொடுக்குமாறு சிறை நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை பதில் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை நான்கு பேரும் தங்களது இறுதி விருப்பத்தை தெரிவித்தாலும் அது நிறைவேற்றக் கூடியது தானா என்பதை சிறை நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுக்கும்.

 

மேலும் கடைசியாக யாரையும் சந்திக்க விரும்புகிறீர்களா என்றும் தூக்கு தண்டனை கைதிகளிடம் கேட்கப்பட்டு இருப்பதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon