லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலிருந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..?
உலகை தொடர்ந்து கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இந்த நிலையில் வைரசால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு புதிதாக ஆறு வகையான அறிகுறிகள் உடலில் ஏற்படும் என்று அமெரிக்காவில் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.
லேசான அறிகுறிகள் உடைய கொரொனா நோயாளிகள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. இது தொடர்பாக புதிய வழிமுறைகளை வெளியிட்டிருக்கும் மத்திய சுகாதாரத்துறை அவர்கள் அனைவரும் வீட்டில் தனியறையில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் 24 மணி நேரமும் தங்களுக்கு உதவும் வகையில் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிக்கு உதவி அளிப்பவரும் அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் என்ற மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதார துறை கூறியுள்ளது.
ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்யவும் எப்போதும் ஆன்லைனில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் தங்களது உடல் நலம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரி களிடம் தெரிவிப்பதோடு சுகாதாரத்துறை கூறிய அறிவுரைகளை பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளது.







