--- --:--:-- --

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரத்தை சூரிய மின்சக்தி நகரமாக மாற்ற வேண்டும்!

3

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரத்தையாவது முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்க கூடியதாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மின்துறை அமைச்சகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.

 

அப்போது மின் துறையை பாதிக்கும் பிரச்சினைகள் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மசோதா திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி மின் துறையில் நிதி நீட்டிப்பு திறனை மேம்படுத்துவது, செயல்திறனை அதிகரிப்பது, வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிப்பதன் அவசியம் குறித்து ஆலோசிக்க பட்டன.

 

விவசாயத்துறையில் சூரிய மின் சக்தி பம்பு செட்டுகள் இயக்குவது முதல் சூரிய மின்சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்குகள் அமைப்பது வரை ஒட்டுமொத்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.

 

மின் வினியோகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான கொள்கையை உருவாக்காமல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி கொள்கையை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon