பாலின வயதை வகைப்படுத்தி ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும்..!
பாலின வயதை வகைப்படுத்தி ஓடிடியில்
திரைப்படங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் பட்டியலிட்டனர். அவதூறுகளை பரப்புவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சமூக வலைதளங்கள் இந்தியாவில் தாரளமாக தங்களது வர்த்தகத்தை மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் அதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும் எனவும் தவறான தகவல்களை பழகக்கூடிய முதல் நபர் யார் என்பதை சமூக வலைத்தளங்கள் கட்டாயம் கண்டறிய வேண்டும் என கூறியுள்ளனர்.
அதே வேளையில் அரசோ நீதிமன்றமோ தகவல்களை கேட்டால் நிச்சயம் வழங்க வேண்டும் என கூறியுள்ள மத்திய அரசு சமூக வலைதளங்களில் இருந்து ஏதாவது ஒரு பயனாளர் நிறுவனங்களால் நீக்கப்படுகிறார் என்றால் அது குறித்த விரிவான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஓடிடி நிறுவனங்களுக்கு உரிய வழிமுறைகளை உருவாக்குவது அவசியமாகிறது என்று குறிப்பிட்டு இருக்கும் மத்திய அமைச்சர்கள் 13 வயதுக்கு மேல் 16 வயதுக்கு மேல் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று பாலின வயதை வழிப்படுத்தி ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.






