65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்..!
விஜய் நடிக்க உள்ள 65வது படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதை மனோஜ் பரமஹம்சா தனது ட்விட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் விஜய் 65 பான் இந்தியா திரைப்படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்திற்கு பின் தற்போது விஜய் 65 படத்திற்காக இருவரும் இணைந்துள்ளனர்.






