--- --:--:-- --

பெல்ஜியம் நாட்டில் பிரபலமாகும் வால்ரஸ் ஹோட்டல்..!

5

பெல்ஜியம் நாட்டில் வால்ரஸ் ஹோட்டல் தற்போது பிரபலமடைந்து வருகிறது. பெய்ரி டெசா என்ற பொழுதுபோக்கு ஹோட்டலில் தங்குபவர்களுக்கு விசித்திரமான அனுபவத்தை ஏற்படுத்த ஹோட்டல் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

 

அதற்காக மிகப் பெரிய தொட்டியில் பிரம்மாண்டமான கடல் உயிரினங்கள் வாழ வைத்து அதில் மனிதர்கள் தங்குவதற்கு அதை அமைத்துக் கொடுத்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வால்ரஸ்சை பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்கிக் கொள்ளலாம். இதற்காக அதிக தடிமன் கொண்ட கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது.

 

இதேபோல் துருவக் கரடிகள், ஓநாய்கள் மற்றும் சைபீரிய புலி ஆகியவற்றின் நடுவே தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வினோதமான தங்கும் விடுதியை கேள்விப்பட்டு உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon