ஃபேஸ்புக் மூலம் பழகி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கம்பன் நகர் பகுதியை சேர்ந்த சிறுமியுடன் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இலியாஸ் ஃபேஸ்புக்கில் நட்பாக பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியை தனியாக வந்தவாசி புறவழிச்சாலையில் உள்ள சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்றவன் நண்பர்கள் பரக்கத் மற்றும் சூரி ஆகியோருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விட்டு தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்த பெற்றோர் சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.







