திருடனை பிடிக்க மாடியில் இருந்து குதித்த போது நடந்த விபரீதம்…!
சென்னை ஜாபர்கான்பேட்டை யை சேர்ந்த ராஜா என்பவர் பிளம்பர் ஆக பணியாற்றி வருகிறார் . இவரது வீடு குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ளது. சனிக்கிழமை இரவு தனது வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கியுள்ளார் ராஜா.
அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்து திருட பீரோவை திறக்க முயன்றதாக தெரிகிறது. சத்தம் கேட்டு எழுந்த ராஜா திருடனை கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். திருடனை பாய்ந்து சென்று பிடிக்க முயன்றுள்ளார். அவன் தப்பியோட எந்திரிக்க இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் திருடன் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடுகிறான். அவரை பிடிப்பதற்காக ராஜாவும் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மாடியில் இருந்து குதித்து தப்பி விட திருடனை பிடிக்கும் முயற்சியில் இளைஞர் படுகாயம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







