--- --:--:-- --

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 6 அடி நீளமுள்ள எலும்புக்கூடு..!

10

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்த நிலையில் தொன்மையான மனிதர்களின் இன மரபியலை அறியும் வகையில் கொந்தகை ஈமகாட்டு பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் இன்று மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே 5 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 6 அடி நீளத்திற்கு மனித எலும்புக்கூடு உள்ளது. குழந்தைகள், எலும்புக்கூடு, விலங்குகள் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு
டி.என். ஏ.சோதனைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon