--- --:--:-- --

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஆதாரங்கள் குறித்து குரல் எழுப்பப்படும்..!

12

த்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி ஆதாரங்கள் குறித்து குரல் எழுப்பப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 27 பேர் கலந்து கொண்டனர். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவும், குரல் எழுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும் தமிழகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகையை புயல் பாதிப்பு நிவாரண தொகையை விடுவிக்க வழி நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவாதங்களின் போது எந்த மாதிரியான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon