--- --:--:-- --

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு..!

13

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நாள்தோறும் இலவச தரிசனத்திற்கு 20,000 டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பதி ஏழுமலையான் கோவில் விதிமுறைகளின்படி நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்காக இலவச தரிசன டோக்கன் 10,000 பேருக்கும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன் 20,000 பேருக்கும் வழங்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் நோக்கத்தில் இலவச தரிசன டோக்கன்கள் இனி நாள்தோறும் 20,000 பேருக்கும் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த டோக்கனை திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் பூ தேவி காம்ப்ளக்ஸில் ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon