--- --:--:-- --

ராஜபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைகீழாக இயற்றப்பட்ட தேசிய கொடி..!

11

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மரியாதை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது.

 

ஊராட்சி ஒன்றிய தலைவர், திமுகவை சேர்ந்த சிங்கராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் மற்றும் திமுக கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தேசியக்கொடி தலைகீழாக இருப்பது கூட அறியாமல் ஒருவர் பின் ஒருவராக மரியாதை செலுத்தினர். சுமார் 10 நிமிடங்கள் வரை தேசியக்கொடி தலைகீழாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் சுதாரித்துக்கொண்டு சரியான முறையில் தேசியக்கொடியை இயற்றியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon