ஆட்டோவில் ஊர்வலமாக சென்று விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல்.!
சீர்காழியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆட்டோவில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.
எனவே மக்கள் இயக்கம் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் தலைமையில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து விஜய் மக்கள் இயக்கம் ஒன்றிய பொறுப்பாளர் சீர்காழி நகராட்சி 9வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





