--- --:--:-- --

3 நாட்கள் பிரிட்ஜில் வைத்த இறைச்சியில் செய்த பிரியாணி கடை சிக்கியது..!

7

விழுப்புரத்தில் திறக்கப்பட்ட 3 மாதமே ஆன பல்லாவரம் யா மொய்தீன் கடையில் மூன்று நாட்களுக்கு மேல் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை கொண்டு சிக்கன் பிரியாணி வழங்கியதாக அப்பகுதி வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

 

விழுப்புரம் நீதிமன்றம் அருகே பல்லாவரம் யா மொய்தீன் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு மட்டன், சிக்கன் பிரியாணி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு சென்ற மதுபானம் மற்றும் ஸ்ரீபால் ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

 

பிரியாணி ருசி மாறி இருந்ததால் இது குறித்து கடை ஊழியர்களிடம் அவர்கள் கேட்டுள்ளனர். மேலும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இருவருக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உணவகத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் மூன்று நாட்களுக்கு மேலாக பதப்படுத்தி வைக்கப்பட்ட இறைச்சிகள் கொண்டு சமைத்த பிரியாணி மற்றும் அசைவ உணவு பரிமாறப்பட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை உரிமையாளர் கைகூப்பி மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Right Menu Icon