நடிகர் விஜய்யை சந்தித்த வருண் சக்கரவர்த்தி..! டிவிட்டரில் வெளியான புகைப்படம் வைரல்..!
இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் சக்ரவர்த்தி அண்மையில் நடைபெற்ற போட்டி ஒன்றில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான வருண் சக்கரவர்த்தி தலைவா படத்தில் விஜய் கெட்டப்பை தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நடிகர் விஜய்யை வருன் சக்ரவர்த்தி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப் படத்தை வருண் சக்ரவர்த்தி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.







