பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபருக்கு நேர்ந்த கொடுமை..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கைநீட்டி கோலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுகைல். 23 வயதான இவர் தனது உறவினர் வீட்டின் வெளியே சிறுநீர் கழித்துள்ளார். இதனை பார்த்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுகைலை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதற்காக ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







