தமிழகத்தில் குறைந்து வரும் கொரொனா பரிசோதனைகளின் எண்ணிக்கை..!
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் கொரொனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி ஒரேநாளில் 97 ஆயிரத்து 87 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அதன்பின்னர் பரிசோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது ஒரு நாளில் 62,416 பரிசோதனைகள் என்ற அளவை எட்டியுள்ளது. கொரொனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்ததே பரிசோதனை எண்ணிக்கை குறையக் காரணம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்.
எவ்வித ஆதாரமுமின்றி அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு வருவது அவசியம் என்றும் அறிகுறிகளுடன் வரும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.







