--- --:--:-- --

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!!

IMG-20200224-WA0083

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் நிகழ்ச்சியாக மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமம் சென்று பார்வையிட்டார்.

 

இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை தந்துள்ளார். மனைவி மெலானோவுடன் குஜராத் தலைநகர் அகமதாபாத் வருகை தந்த டிரம்ப்பை பிரதமர் மோடி ஆரத் தழுவி உற்சாகமாக வரவேற்றார்.

 

பின்னர் 22 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடியுடன் டிரம்ப் காரில் பயணித்தார். வழி நெடுகிலும் சாலையோரம் குவிந்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 

வழியில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமத்துக்கு டிரம்ப் சென்றார். அங்கு கை ராட்டையை ஆச்சர்யத்துடன் சுழற்றிப் பார்த்து அதிபர் டிரம்ப் வியந்தார்.

 

அப்போது உடன் வந்த பிரதமர் மோடி, சபர்மதி ஆஸ்ரமத்தின் பெருமைகளை அதிபர் ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார்.ஆஸ்ரமத்தை சுற்றிப் பார்த்த பின் டிரம்ப்புக்கு கைராட்டை, கதராடை மற்றும் காந்தியின் புத்தகங்களை பரிசாக பிரதமர் மோடி வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon