மகளிர் உரிமைத் தொகை குறித்து அப்டேட்..!
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 30 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மங்கல நாண் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மணமக்களுக்குப் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்… நல்ல காதலர்களால அதை விட முக்கியம் நல்ல நண்பர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என இணையர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.மேலும் தமிழ்நாடு அரசின் சாதனை திட்டங்களை பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை பெறுவர்களின் எண்ணிக்கை 3 மாதங்களில் உயர்த்தப்படும் என்று உறுதி அளித்ததார்.
“இன்று 30 இணையர்களுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களும் தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தித்தார். அப்போது இண்டியா டுடே கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் தான் நடந்திருக்கிறது.
ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் தலைமையிலான திமுக கூட்டணிக்கு கொடுத்து சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த கருத்து கணிப்பு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அதிகமான வேகத்தை கொடுக்கிறது. இன்னும் அதிக மக்கள் பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது என்றார்.
அதிமுக குறித்த கேள்விக்கு ,அது அவர்கள் உட்கட்சி பிரச்சினை, அதில் கருத்துகூற விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.பட்ஜெட்டில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.





