மாணவிக்கு முத்தம் கொடுக்கப் பாய்ந்த நபர்..!
திருச்சியில் கல்லூரி மாணவிக்கு மர்மநபர் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவிக்கு மர்ம நபர் ஒருவர் முத்தம் கொடுக்க முயற்சித்த நிலையில் மாணவி கூச்சலிட்டுள்ளார்.
மர்ம நபர் தப்பி சென்ற நிலையில் அங்கு வந்த ஆட்டோ ஓட்டுனர் பெண்ணுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்த தாக கூறப்படுகிறது. ஆனால் ஆட்டோ ஓட்டுநர் தான் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றதாக நினைத்து சிலர் அவரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய மோதல் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





