--- --:--:-- --

விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை!

download (3)

நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சந்திரயான்-2 ஆர்பிட்டால் மூலம் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விக்ரம் ஆண்டுகளில் இதுவரை தொடர்பு ஏற்படுத்தப் படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் விக்ரம் லேண்டர்ருடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி சந்திரனில் தரை இறங்க வேண்டிய விக்ரம் லேண்டர் திடீரென அதிகாலை திசைமாறிச் சென்று தொடர்பை துண்டித்துக் கொண்டது. இதனையடுத்து ஆர்பிடல் அனுப்பிய புகைப்படத்தில் மூலம் லேண்டர் இருக்குமிட கண்டறியப்பட்டது.

 

சாய்ந்த நிலையில் நிலவில் பத்திரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விக்ரம் லாண்டரிங் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதனுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon