யாருக்கு பிரச்னை என்றாலும் முதலில் குரல்கொடுப்பவர் – ரஜினி அஞ்சலி
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசியதாவது, என்னுடைய 50 ஆண்டுகாள நண்பர். பாரதிராஜா திறமை குறித்து எல்லோருக்கும் தெரியும். நிறைய நாயகர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வாழ வைத்தவர்.
அதுமட்டும் இல்லாமல் யாருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுத்து அவர்களுக்காக போராடியவர் பாரதிராஜா. அவர் படைப்புகள் காலம் தாண்டி நிற்கும்.தனிப்பட்ட முறையில் பாரதிராஜா ஒரு குழந்தை மாதிரி. உள்ளே என்ன இருக்கிறதோ அதை ஓபனாக சொல்லிவிடுவார் என்றார்.





