அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலை படிப்புகள் நிறுத்தம்..!
மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரண்டு முதுகலை படிப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்டெக் பயோடெக்னாலஜி மற்றும் எந்த கம்ப்யூட்டெஸ்னல் பயாலஜி ஆகிய படிப்புகள் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு நடத்தாமல் இந்த ஆண்டு கேட்வி என்ற மத்திய அரசின் புதிய நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியாகி பல நாட்களான பின்னும் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையை நடத்தாமல் உள்ளது. இது பற்றி விசாரித்த போது மத்திய அரசின் 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதா அல்லது மாநில அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதா என்று சிக்கல் எழுந்து இருப்பதால் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மாதம் 12,000 ரூபாய் உதவித் தொகையுடன் படிக்க இருந்த மாணவர்களின் கனவு இதனால் கலைந்து போகிறது. இந்த படிப்பை நம்பியிருந்த மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.







