--- --:--:-- --

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய போலீசார்..!

4

ம்மு காஷ்மீரில் என்கவுன்டரில் ஒரு தீவிரவாதியை போலீசார் சுட்டு வீழ்த்தியதையடுத்து உடன் இருந்த 2 தீவிரவாதிகள் ஏகே 47 துப்பாக்கிகளுடன் சரணடைந்துள்ளனர்.

 

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லில்கர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் போலீசார் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது மூண்ட மோதலில் தீவிரவாதி ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் அந்த தீவிரவாதியுடன் பதுங்கி இருந்த 2 தீவிரவாதிகள் ஏகே47 துப்பாக்கிகளுடன் போலீசாரிடம் சரண் அடைந்தனர். முன்னதாக புல்வாமாவில் அவந்திபோரா பகுதியில் நேற்று நடைபெற்ற மற்றொரு என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon