சசிகலா நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்..!
சசிகலா நாளை காலை 10 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இது குறித்த தகவலை விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவர் தற்போது உடல் நலம் தேறி உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வீட்டில் சசிகலா தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் உடல்நலம் தேறி உள்ளதால் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







