இரு சுவருக்கு இடையில் மாட்டி தவித்த இரு சிறுவர்கள்
ஆந்திராவில் குறுகலான இரு சுவர்களுக்கு மத்தியில் தவறிவிழுந்து தவித்த இரு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். குண்டூர் மாவட்டம் நூலக பேட்டையில் பள்ளி சுவரையொட்டி குறுகலான வகையில் சுற்றுசுவர் உள்ளது.
இந்த நிலையில் அந்த சுவரில் ஏறி விளையாடிய 4 வயது பள்ளி சிறுவர்கள் ரமண பாபு, முண்ணா ஆகியோர் இரு சுவர்களுக்கு இடையே தவறி விழுந்தனர். இதில் மூச்சுத்திணறிய இருவரையும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். தகவல் அறிந்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.





