--- --:--:-- --

திருப்பூர் கே.எம்.சி. சட்டக் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய ‘இயற்கையைப் பாதுகாப்போம்’ மாபெரும் மாரத்தான் ஓட்டம்!

IMG-20260726-WA0002

ஜூலை ; 26-
திருப்பூர் கே.எம்.சி. சட்டக் கல்லூரி (KMC College of Law) மற்றும் பெருமணநல்லூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இயற்கையைப் பாதுகாப்போம் மாரத்தான்’ (Conserve Nature Run) போட்டி இன்று காலை 7.15 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில்,  நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தை,
திருப்பூர் துணை ஆட்சியரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சதீஷ்,
துணை காவல் கண்காணிப்பாளர், குமார் , காவல் ஆய்வாளர் அமுதா
பெருமாநல்லூர் ரோட்டரி சங்க தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் ஓட்டம் கே.எம்.சி. சட்டக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி, குறிப்பிட்ட தூரத்தைக் கடந்து மீண்டும் அதே கல்லூரி வளாகத்தில் நிறைவடையும் வகையில் மொத்தம் 8.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்டது.

 

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இதில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
முன்னதாக ,தாளாளர் அருணா ஸ்ரீதேவி ,செயல் அலுவலர் சசிகாந்த்,
செயலாளர்  ஞானவர்ஷினி  ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர்.

வெற்றிபெறும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக ரூ. 72,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது:
*முதலாம் பரிசு: ரூ. 10,000
*இரண்டாம் பரிசு:ரூ. 5,000
*மூன்றாம் பரிசு: ரூ. 3,000
மற்றும் பல சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. இயற்கைப் பாதுகாப்பு மற்றும் உடல் உறுதியினை வலியுறுத்தும் இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon