நிர்பாயா கைதிகளுக்கு மரண தண்டனை தள்ளிப்போகுமா?
நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் ஆறாம் தேதி நடக்க உள்ளதால் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 3ஆம் தேதி குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்படாது என கூறப்படுகிறது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் எனக்கூறி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வரும் 6ஆம் தேதி இது விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டாலும் அடுத்தகட்டமாக அவன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு 14 நாட்கள் கழித்தே தண்டனையை நிறைவேற்ற முடியும். எனவே நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது மார்ச் 20ஆம் தேதி வரை தள்ளிப்போகும் என கருதப்படுகிறது.





