அக்.15-ல் அரசியல் அறநெறி மையம் தொடக்கம்: அண்ணாமலை..!
ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அறிவியலும், ஆன்மீகமும் கலந்து இருக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம். நான் மாணவராக இருக்கும்போதே அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன்.
கலாம் வழியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை நல்வழியில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். இங்கு வந்து உரம் ஏற்றிக் கொண்டு செல்வதற்காக வந்திருக்கிறேன். அரசியலில் நன்நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் அப்துல் கலாம். அரசியலில் அறநெறி என்பதை விரும்பி அதற்காக அன்றே புத்தகம் எழுதியவர். தகுதியானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர்.
கலாம் வழியில் எங்களது பயணம் தொடரும். அக்டோபர் 15-ந்தேதி கோவையில் அப்துல் கலாம் பிறந்த நாளில் அரசியல் அறநெறிக்கான மையம் என்ற பெயரில் மையம் ஒன்றை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறோம். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் அதில் தகுதி பெற்று வருவார்கள். கலாம் அய்யாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுவோம் என்றார்.






