பைக்கிற்குள் புகுந்த நல்ல பாம்பு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த நல்லபாம்பை நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மீட்புப்படையினர் அகற்றினார். வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் 2 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று உட்புகுந்ததை கண்ட பொதுமக்கள் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.





