ரூ. 2,500 உரிமைத் தொகை எப்போது? – நயினார் நாகேந்திரன்
மகளிர் உரிமைத் தொகையை த.வெ.க அரசு முடக்க நினைப்பதாக குற்றம் சாட்டிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், முந்தைய அரசின் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாமல்தான், மாற்றம் தருவோம் என்று மன்றாடி கேட்ட த.வெ.க.வினை மக்கள் அரியணையில் அமர்த்தினார்கள்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு போன அரசு தாமதமாகத்தானே மகளிர் உரிமைத் தொகையை கொடுத்தது, நாங்கள் மட்டும் ஏன் சீக்கிரம் கொடுக்க வேண்டும் என்ற தொனியில் த.வெ.க அமைச்சர் பேசுவது, தி.மு.க.வும் த.வெ.க.வும் வெவ்வேறு இல்லை என்ற உண்மையை மீண்டுமொருமுறை உரக்க உணர்த்துகிறது.
இதுபோன்ற சாக்கு போக்குகள் எல்லாம் இனி இங்கே எடுபடாது. கொடுத்த வாக்கின்படி ரூ. 2500 மகளிர் மாத உரிமைத் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.






