சில அரசியல் கட்சிகள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து புகழைத் திருடுகிறது – ராஜ்மோகன்
சென்னையில் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மாநிலங்களின் முதல்வர்களை வைத்துக் கொண்டு பிரதமரிடம் பேசும் போதே நீட்டை ஒழிப்பேன் என்று சொன்னதோடு எங்களை எல்லாம் நாகரீக அரசியலில் எங்களை நடை போட சொன்னவர் எங்கள் தலைவர்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறோம் நீட்டை சரி செய்வது அல்ல; அதை ஒழிப்பதே மாற்றம் என்று. சொத்தைத் திருடிப் பார்த்திருக்கிறேன், பணத்தைத் திருடிப் பார்த்திருக்கிறேன். சில அரசியல் கட்சிகள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து, புகழைத் திருடுவது தமிழ்நாட்டில்தான் பார்க்கிறேன் என்றார்.






