--- --:--:-- --

வரதட்சணை கேட்டு மனைவியை கொலை செய்த கணவன்..!

41

திருப்பூரில் வரதட்சணை பிரச்சினையில் பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார். சத்யா நகர் பகுதியை சேர்ந்த அப்துல் சமத் என்பவர் நிஷா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

 

தாய் வீட்டில் வரதட்சணை வாங்கி வருமாறு மனைவியுடன் அப்துல் சமது தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அப்துல் சமத் அருகில் இருந்த குக்கரை எடுத்து நிஷாவின் தலையில் ஓங்கி அடித்ததாகவும் சுருண்டு விழுந்த மனைவியின் கழுத்தை அருகில் இருந்த கத்தியை எடுத்து அறுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இது தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் அப்துல் சமது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon