ட்ரம்ப், மெலனியாவின் மினியேச்சர்கள்..! வைரலான புகைப்படம்..!
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கண்கவர் ஹாலோவிங் நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா பங்கேற்றுள்ளனர். கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முதல் தம்பதிக்கு ஹாலோவீன் கதாபாத்திரங்கள் போன்று வேடமிட்டு உள்ள சிறுவர் சிறுமிகள் வரிசையாக வாழ்த்து தெரிவித்து சென்றனர்.
இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மினியேச்சர் போன்று வந்த சிறுவனும், மெலானியா போன்று உடை அணிந்திருந்த சிறுமியும் சிறப்பு கவனத்தை பெற்றனர்.






