--- --:--:-- --

சாத்தான்குளம் சம்பவம் – கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைளில் ரத்தக்கறை..!

8.1

சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்கள் வெளியாகியுள்ளன.

 

அதில் காவல் நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை மகன் இருவரது ரத்தம் படிந்திருந்தது என்றும் தடயவியல் பரிசோதனையில் அந்த ரத்தக் கறைகள் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இரவு முழுவதும் தாக்கப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்ததால் அதிகமான ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் சிந்திய ரத்தத்தை காயம்பட்ட தந்தை மகன் இருவர் மூலமே துடைக்க சொல்லியும் துன்புறுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

வீட்டிலிருந்து மாற்று உடைகள் கொண்ட வரச்சொல்லி இரண்டு முறை உடைகள் மாற்றப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்ணிலா பரிசோதனை செய்தபோது அலட்சியமாக செயல்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை சான்றிதழில் குறிப்பிடாமல் சிறையில் அடைக்க தகுதியானவர்கள் என தகுதி சான்றிதழ் கொடுத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இருவரையும் சிறையில் அடைக்கும் போது சிறைக் காவலர்கள் மற்றும் சிறை மருத்துவர் ஆகியோரிடமும் உரிய ஆவணங்களிலும் இருவர் உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon