அமெரிக்க அதிபர் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் எனக்கூறும் டிரம்ப்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்திருக்கிறார். ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு இருக்கும் அவர் ஜார்ஜியாவில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் போது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் கையெழுத்துக்களை சரி பார்ப்பதற்கு அனுமதி தரவில்லை என்றும் கூறியுள்ளார். அரசியல் சாசனங்களை மீறி மோசடி நடந்திருப்பதாக புகார் கூறியுள்ளார்.
அதே நேரம் அதிபர் டிரம்ப் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை எழுப்பி வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.






