பாதசாரிகள் மீது சரக்கு வாகனம் மோதும் காட்சி..!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பில் அதிவேகமாக சென்ற சரக்கு வேன் தாறுமாறாக சாலையில் திரும்பியது. அப்பொழுது இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இருவர் மீதும் அடுத்தடுத்து மோதி நிற்காமல் சென்றது.
கடந்த 10ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.





