--- --:--:-- --

திருநங்கை காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!

4.1

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் திருநங்கை காவலர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பயிற்சிப் பள்ளி எஸ்‌ஐயை உட்பட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

நவல்பட்டு பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வந்த இருபத்தொரு வயது திருநங்கை கடந்த வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

 

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் எஸ்‌ஐ அசோக் குமார், ஏட்டு இஸ்ரேல் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தனது தற்கொலை முயற்சிக்கு யாரும் காரணமில்லை என திருநங்கை காவலர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon